தமிழர்களுக்கான நீதியை வழங்கும் பொறுப்பு மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு!
போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை வழங்கும் பொறுப்பு மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தின் தலையீட்டை தமிழர்கள் கோரிவருகின்ற நிலையில், நீதி வழங்கும் பொறுப்பு புதிதாக ஆட்சிக்கு வரவுள்ள இலங்கை அரசாங்கத்திடமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் சர்வதேச தலையீட்டிற்கான கோரிக்கையை தொடர்ந்து நிராகரிக்கும் இலங்கை அரசு இந்த விடயத்தில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு உள்நாட்டு பொறிமுறை மூலமே கையாள தம்மால் முடியும் எனக் கூறி வருகிறது.
இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சூழல் தொடர்பில், வாய்மொழியாக அளித்த அறிக்கை ஒன்றில், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதற்கான பொறுப்பை அடுத்து வரும் புதிய ஆட்சியாளரிடம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் வோல்கர் டர்க் ஒப்படைத்தார். நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறுகிறது.
இதுவரை கொடுக்கப்பட்டு நிறைவேற்றப்படாத உறுதிப்பாடுகளை செயல்படுத்தும் பொறுப்பை, இன்னும் சில நாட்களில் ஆட்சிக்கு வரவுள்ள புதிய ஜனாதிபதியிடம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் ஒப்படைத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் சமர்ப்பித்த தனது அரிக்கையில், முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அந்த பேரவைக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்பதை புதிதாக ஆட்சிக்கு வரவுள்ள அரசாங்கத்திற்கு நினைவூட்டினார்.
-(3)




