செய்திகள்

தமிழில் கொடிகட்டி பறப்பாரா அனுபமா பரமேஸ்வரன்.

தன்னுடைய சுருல் முடி மூலம் மலையாள ரசிகர்களை கட்டிப்போட்டவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கில் அஆ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.

திரிவிக்ரம் இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு, அனுபமாவிற்கும் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை கொடுத்திருக்கிறது. இப்பட வெற்றியை தொடர்ந்து அனுபமாவிடம் கால்ஷீட் பெற வரிசைகட்டி வருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

அதேசமயம் அனுபமா தமிழில் தனுஷின் கொடி படத்தில் நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி கொடிகட்டி பறப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

N5