செய்திகள்
தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரமே பாட வேண்டுமென அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மூன்று பேர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தேசிய கீதத்தை சிங்களத்திலேயே பாடமுடியுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனை தமிழில் பாடுவது மக்களின் உரிமைகளை மீறும் செயல் எனவும் இதனால் சிங்களத்தில் மாத்திரமே அதனை பாட முடியுமென அறிவிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10




