செய்திகள்

தமிழ்க் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது 

வடக்கு , கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (12) நடைபெறவிருந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை (15)  வரை பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு  இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை  ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை ஆரம்பமானது.

நேற்றைய பேச்சுவார்த்தையில்  காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, அதிகாரப் பரவலாக்கம், அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

(3)