செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்;கொழும்பில் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

இவ்வாறு பெறப்பட்ட கையெழுத்துக்களை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் மகஜராக கையளிக்கவுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

n10

n10