தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளது
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது.அதனடிப்படையில், செயலாளர், நிர்வாக செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி – இணக்கப்பாடு ஏற்பட்டால், மத்தியகுழுவிலேயே புதிய நியமனங்கள் இறுதியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு திருகோணமலை உப்புவெளியிலுள்ள பீச் ஹொட்டலில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடைபெறும். இதன்போது,புதிய நிர்வாக தெரிவு குறித்து கலந்துரையாடப்படும்.(15)




