செய்திகள்

தமிழ் தெரியாததை எண்ணி கவலையடையும் டலஸ்

தனக்கு தமிழ் மொழி தெரியாமையை எண்ணி தான் வெட்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
21 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்த சிறிய நாட்டில் இரண்டு மொழிகளே பிரதானமாக பேசப்படும் நிலையில் தனக்கு மற்றைய மொழியான தமிழ் தெரியாததை எண்ணி வெட்கப்பட வேண்டியுள்ளது. இதற்கு நானோ , எனது பெற்றோரோ அல்லது பாடசாலையோ காரணமல்ல 1948 முதல் நாட்டை ஆட்சி செய்தவர்களே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். -(3)