செய்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-(3)




