செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் கூட்டு சேராது : பைசர் முஸ்தபா

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட்டு சேரவுள்ளதாக அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகும் நிலையில் இன்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒருபோதும் சுதந்திரக் கட்சி கூட்டு சேராது எனவும் அத்துடன் இந்த இரண்டுக் கட்சிகளுக்குமிடையே எந்த ஒப்பந்தமும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)