செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்ணணி கொக்குவிலில் மக்கள் சந்திப்பு

கொக்குவில் கிழக்கு தலையாளி சனசமூக நிலையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்கள் சந்திப்பை ஒன்றை நடத்தி உள்ளது.

இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தேசிய அமைப்பாளர்- வி.மணிவண்ணன்(சட்டத்தரணி) மற்றும் பல கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

தேர்தல் தொடர்பான விளக்கங்கள் ,கட்சியின் எதிர்கால திட்டங்கள் என்பவை இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.