செய்திகள்

தமிழ் பொதுவேட்பாளருக்கு கிழக்கு மாகாணத்தில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு கிழக்கு மாகாணத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அவர் இன்று கிழக்கிலுள்ள பகுதிகளுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, மேள – தாள வாத்தியங்கள் முழங்கி அவருக்கு மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் இணைந்து தேர்தலில் களமிறக்கியுள்ள ஜனாதிபதி பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்களிடையே இவ்வாறான வரவேற்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-(3)