செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனின் சின்னம் சங்கு!

ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து தெரிவு செய்துள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சங்கு சின்னமாக வழங்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு ராஜகரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அரியநேந்திரன் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

தற்போது தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.
-(3)