செய்திகள்

தமிழ் மக்கள் பேர­வையின் யோச­னை எந்தளவுக்கு சாத்தியமானவை?

– கலா­நிதி எஸ்.ஐ. கீத­பொன்­கலன் –

அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்­களைச் செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யி­ருக்கும் இலங்கை அர­சாங்கம், பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்­று­வ­தற்­கான பிரே­ர­ணையை முன்­வைத்­தி­ருக்­கி­றது. அத்­துடன் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் மக்கள் பிரதிநிதித்­துவக்குழு நாடு­பூ­ரா­கவும் சென்று அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்கள் தொடர்­பான மக்­களின் யோச­னை­க­ளையும் கருத்­துக்­க­ளையும் கேட்­ட­றிந்து வரு­கின்­றது.

அர்த்­த­புஷ்­டி­யான சீர்­தி­ருத்­தங்­களைச் கொண்டு வரு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் தேவை­யான மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவைப் பெறு­வதில் அர­சாங்கம் எதிர்­நோக்கக் கூடிய பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யிலும் இது­வ­ரை­யான நகர்­வுகள், சீர்­தி­ருத்­தங்கள் சாத்­தி­ய­மா­னவை என்ற எண்­ணத்தை வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. மேலும் சில தனிப்­பட்­ட­வர்­களும் குழுக்­களும் அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்கள் தொடர்­பான தங்­க­ளது யோச­னை­களைச் சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றார்கள்.

விக்கி­னேஸ்­வ­ரனின் யோச­னைகள்

வட ­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கினேஸ்­வ­ரனைத் தலை­வ­ராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை அர­சி­ய­ல­மைப்பு யோச­னைகள் வரைவை தயா­ரிப்­ப­தற்கு நிபுணர் குழு­வொன்றை நிய­மித்­தி­ருந்­தது. அக்­குழு கடந்த மாதம் அதன் யோச­னை­களை விக்கி­னேஸ்­வ­ர­னிடம் கைய­ளித்­தி­ருந்­தது. அந்த வரைவு தமிழில் மொழி பெயர்க்­கப்­பட்­டி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. விக்கி­னேஸ்­வரன் அந்த யோச­னை­களை ஏற்றுக்கொண்டு அர­சாங்­கத்­துக்கு அதைச் சமர்ப்­பிப்­பாரா அல்­லது தனது சொந்­தத்தில் மாற்­றங்­களைச் செய்­வாரா என்­பது தெளி­வாகத் தெரி­ய­வில்லை. ஆனால், விக்கி­னேஸ்­வ­ர­னி­ட­மி­ருந்தும் அவ­ரது நேச சக்­தி­க­ளி­ட­மி­ருந்தும் கருத்­துக்­களைப் பெறாமல் நிபு­ணர்­குழு சுயா­தீ­ன­மாக செயற்­பட்­டி­ருக்­கு­மென்று கரு­த­மு­டி­ய­வில்லை.

cvஅண்­மைக்­கா­ல­மாக முத­ல­மைச்­ச­ரிடம் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும் கோட்­பாட்டுக் கூர்ப்­பையும் அவரின் தற்­போ­தைய கூட்­டா­ளி­க­ளையும் மன­திற்­கொண்டு நோக்கும் போது அந்த யோச­னைகள் வரைவின் உண்­மை­யான சிற்பி விக்கி­னேஸ்­வ­ர­னாக இருந்தால், எவரும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. வரைவு பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாக இருக்­கி­றது. இந்தப் பிரச்­சி­னை­களை ஆரா­யு­முன்­ன­தாக, தமிழ் மக்கள் போர­வையின் நிபுணர் குழு­வினர் தங்­க­ளது தலை­வ­ருக்கு எத்­த­கைய யோச­னை­களை கைய­ளித்­தி­ருக்­கின்­றனர் என்­பதை விளங்கிக் கொள்­வது பய­னு­டை­ய­தாக இருக்கும்.

இலங்­கையில் சமஷ்டி அர­சொன்று உரு­வாக்­கப்­பட்­ட­வேண்­டு­மென்ற யோச­னையை நிபு­ணர்­குழு முன்­வைக்­கின்­றது என்­பதை எடுத்த எடுப்­பி­லேயே புரிந்­து­கொள்ள முடி­கி­றது. ‘இலங்கை ஒரு சமஷ்டிக் குடி­ய­ர­சாக இருக்கும்’ என்று ஆட்­சி­முறை என்ற தலைப்பின் கீழ் (பக்கம் 4) யோசனை கூறப்­ப­டு­கி­றது. இரண்­டா­வது சபை­யொன்­றுக்­கான (செனட்) யோச­னையும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே நிபுணர் குழு சமஷ்டி வாதத்­தைப்­பற்­றியே பேசு­கி­றது என்­பது தெளி­வா­கி­றது. சமஷ்டி முறை­யொன்­றையே தமிழ் மக்கள் பேரவை யோச­னை­யாக முன்­வைக்­கின்­ற­தென்றால் ஏன் அது யோச­னைகள் வரைவு ஒன்றைத் தயா­ரிக்க வேண்டும்? தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே அதன் அர­சியல் சுலோ­க­மாக சமஷ்­டி­வா­தத்தை ஏற்றுக்கொண்­டி­ருக்­கி­றது. அதனால், தமிழ் மக்கள் பேர­வையின் யோச­னை­களில் வேறு ஏதோ இருக்­கி­றது. இங்­குதான் உன்­னிப்­பாக அவ­தா­னிக்க வேண்­டிய தேவை எழு­கி­றது.

கூட்­டாட்சி அரசு

யோச­னைகள் வரைவை மிகவும் அவ­தா­ன­மாக வாசிக்கும் போது தமிழ் மக்கள் போர­வையின் நிபு­ணர்­குழு உண்­மையில் தளர்­வா­ன­தொரு கூட்­டாட்சி முறை­யையே (Confedaral State) பிரே­ரித்­தி­ருக்­கி­றது என்­பதைப் புரிந்துகொள்ளக் கூடி­ய­தாக இருக்­கி­றது. முதலில், தமிழ் மக்கள் சுய­நிர்­ணய உரி­மையைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கி­றார்கள் என்ற திரும்பத் திரும்ப வலி­யு­றுத்­து­கின்ற வரைவு அந்த உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென்று கூறுகி­றது. தமிழ் மக்­களின் தனித்­து­வமும் அவர்­களின் சுய­நிர்­ணய உரி­மையும் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் (பக்கம் 1) தமிழர் பரா­தீ­னப்­ப­டுத்த முடி­யாத சுய­நிர்­ணய உரி­மை­யு­ட­னான தனித்­து­வ­மான ஒரு மக்கள் பிரி­வினர்; தங்­களின் சுய­நிர்­ணய உரி­மை­யு­ட­னான தனித்­து­வ­மான ஒரு மக்கள் பிரி­வினர். தங்­களின் சுய­நிர்­ணய உரி­மையை மதித்து உறு­திப்­ப­டுத்­து­கின்ற ஐக்­கி­யப்­பட்­டதும் பிரி­வு­ப­டா­த­து­மான ஒரு இலங்கை மீது தமி­ழர்கள் பற்­று­று­தியைக் கொண்­டி­ருப்­பார்கள் (பக்கம் 4) என்று கூறப்­ப­டு­கின்­றது.

இரண்­டா­வ­தாக, உச்ச அளவு அதி­கா­ரப்­ப­ர­வலாக்கல் வடிவம் ஒன்­றுக்­கான கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. உதார­ண­மாக, தமி­ழர்கள் கூடு­தல்­பட்ச சுயாட்­சியை (Maximum Self Government) கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும். (பக்கம் 6) என்று கூறப்­பட்­டி­ருக்­கி­றது. வடக்கு – கிழக்கைப் போன்று நாட்டின் வேறு எந்தப் பகு­தியும் கூடு­தல்­பட்ச சுயாட்­சிக்­கான உரி­மைக் ­கோ­ரிக்­கையை முன்­வைக்­க­லா­காது என்­பது அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென்று தமிழ் மக்கள் பேர­வையின் நிபு­ணர்­குழு வலி­யு­றுத்­தி­யி­ருப்­பது முக்­கி­ய­மாகக் கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­தாகும். உச்ச அளவு அதி­காரப்பர­வலாக்­கத்­துக்­கான கோரிக்­கைக்­கான இன்­னொரு உதா­ர­ணத்தை வெளி­யு­றவுக் கொள்­கை­யுடன் தொடர்­பு­டைய யோச­னை­களில் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

வெளி­யு­றவுக்கொள்கை சமஷ்டி (மத்­திய) பட்­டி­ய­லுக்­கான விட­ய­தா­ன­மாக இருக்கும் (பிரிவு 12.1) என்று கூறப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், மாநி­லத்­துக்­கான பட்­டி­யலில் உள்ள விட­ய­தானம் ஒன்று வெளி­யு­றவுக் கொள்கைத் தீர்­மா­ன­மொன்­றுக்கு உள்­ளாகும் போது (மாநி­லங்­களின் அதி­கா­ரங்கள் அல்­லது அவற்றின் அத்­தி­யா­வ­சி­ய­மான நலன்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட) வெளி­யு­றவுக்கொள்கை தீர்­மா­னங்­களை எடுக்கும் செயன்­மு­றை­களில் மாநி­லங்கள் பங்­கேற்கக் கூடி­ய­தாக இருத்தல் வேண்டும் என்று கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

சமஷ்டி அர­சாங்கம் (மத்­திய) மாநி­லங்­க­ளுக்கு முன்­கூட்­டியே நேர­கா­லத்­தோடு முழு­மை­யாக அறி­வித்து ஆலோ­சனை கலக்க வேண்டும். மாநி­லங்­களின் நிலை அவற்றின் அதி­கா­ரங்கள் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­களில் குறிப்­பி­டத்­தக்­க­ள­வுக்கு வலு­வா­ன­தாக இருக்கும் இந்த விவ­கா­ரங்­களில் பொருத்­த­மான சர்­வ­தேச பேச்­சு­வார்த்­தை­களில் மாநி­லங்கள் பங்­கேற்கும் என்று வரைவில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது. மாநி­லங்­களின் பொரு­ளா­தார, கல்வி மற்றும் கலா­சார நலன்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கையின் தூத­ர­கங்­களில் தனி­யான பிரிவு ஒன்று இருக்க வேண்­டும்­மென்றும் தமிழ் மக்கள் பேர­வையின் நிபுணர் குழு விரும்­பு­கி­றது (பக்கம் 11)

சுருக்­க­மாகக் கூறு­வ­தானால், வரைவின் பல பிரி­வுகள் குறிப்­பாக காணி, பொலிஸ் அதி­காரம், கல்வி, பொதுச்சேவை போன்ற விவ­கா­ரங்­களில் ஒரு அரசு இரு நிர்வா­கங்கள் (One State two administrations) என்று அழைக்­கப்­ப­டக்­கூ­டிய யோச­னையை முன்­வைக்­கி­ன்றது போலத் தெரி­கி­றது. அதா­வது வடக்கு – கிழக்­கிற்கு ஒரு நிர்­வாகம். நாட்டின் ஏனைய பகு­திக்கு ஒரு நிர்­வாகம்

இந்த யோச­னைகள் எல்லாம் எனது அபிப்­பி­ரா­யத்தின் படி நான்கு முக்­கிய பிரச்­சி­னை­களைக் கிளப்­பு­கின்­றன. (1) அவை பெரும்­பாலும் நிரா­க­ரிக்­கப்­பட்ட யோச­னைகள் (2) இனத்­துவ சமூ­கங்கள் மத்­தி­யி­லான நல்­லி­ணக்க நிலையைப் பாதிக்­கக்­கூ­டிய ஆற்றல் கொண்­டவை (3) வடக்கில் உள்ள மக்­களின் பாது­காப்­புக்கு ஊறு­வி­ளை­விக்கக் கூடி­ய­வை­யாக அமை­யலாம் (4) யதார்த்தபூர்­வ­மற்­றவை.

நிரா­க­ரிக்­கப்­பட்ட யோச­னைகள்

போரின் முடிவும் போர் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட விதமும் இலங்­கையில் தனி­யான அர­சொன்றை தமி­ழர்கள் ஒரு­ போ­துமே கொண்­டி­ருக்க முடி­யாது என்­பதை நிரூ­பித்­தி­ருக்­கின்­றன. இந்த விளக்­கப்­பா­டுதான் தமி­ழர்­களின் பிர­தான அர­சியல் கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதன் 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உத்­தி­யோகபூர்­வ­மாக தனி­நாட்டுக் கோரிக்­கையை கைவி­டு­வ­தற்கு நிர்ப்­பந்­தித்­தது. அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வன்­மு­றை­யையும் நிரா­க­ரித்­து­விட்­டது. சமஷ்டி முறையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தீர்­வொன்றை ஏற்றுக்கொள்ளத் தயா­ரா­யி­ருப்­ப­தா­கவும் கூட்­ட­மைப்பு பிர­க­டனம் செய்­தது.

2010 தேர்­தலில் தமிழ் மக்கள் கூட்­ட­மைப்­புக்கு அமோ­க­மாக வாக்­க­ளித்­தார்கள், 2015இல் சமஷ்டித்தீர்வு மீதான பற்­று­று­தியை கூட்­ட­மைப்பு மீளவும் வலி­யு­றுத்­தி­யது. அதே­வேளை விக்கி­னேஸ்­வரன் சுய­நிர்­ணய உரி­மைக்­காகக் குர­லெ­ழுப்­பிய கட்­சி­களை ஆத­ரித்தார். விக்கி­னேஸ்­வரன் விடுத்த அழைப்பை தமிழ் மக்கள் முற்­றாக நிரா­க­ரித்­தார்கள். சுயநிர்­ணய உரிமைக் கோரிக்­கையை முன்­வைத்து தேர்­தலில் நின்ற கட்­சி­க­ளினால் ஒரு ஆச­னத்தைக் கூட வெற்­றி­பெற முடி­யாமல் போனது. எனவே, தமிழ் மக்கள் பேர­வையின் நிபுணர் குழுவின் வரைவை தமிழ் மக்­களின் யோச­னைகள் என்று முன்­வைப்­ப­தற்­கான அரு­கதை விக்கி­னேஸ்­வ­ர­னுக்கும் அந்தப் பேர­வைக்கும் கிடை­யாது. அந்த வரைவை வைத்துக்கொண்டு விக்கி­னேஸ்­வரன் என்ன செய்­யப்­போ­கிறார் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

நல்­லி­ணக்­கத்தை மலி­னப்­ப­டுத்தல்

இரண்­டா­வ­தாக, ஐக்­கி­யப்­பட்ட நாடொன்­றுக்குள் சமூ­கங்கள் வாழக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும் என்­பதே இலங்­கையில் இனங்கள் மத்­தி­யி­லான நல்­லி­ணக்க நிலைக்­கான முன்­நிபந்­த­னை­களில் ஒன்­றாகும். தமி­ழர்கள் இன்­னமும் தனி­நா­டொன்­றுக்­கான சிந்­த­னை­யு­ட­னேயே செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற எண்ணம் அந்த வடி­வி­லான அதி­காரப்பர­வ­லாக்­கத்­தையும் இன நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய நட­வ­டிக்­கை­க­ளையும் ஏற்­றுக்­கொள்­வதில் இருந்து சிங்­கள மக்­களைத் தடுக்கும், அதி­காரப்பர­வ­லாக்­கத்­துக்­கான நியா­ய­பூர்­வ­மான எந்­த­வொரு திட்­டமும் இல்­லாமல் தமி­ழர்கள் சிங்­க­ள­வர்­க­ளு­ட­னான தங்­களின் வேறு­பா­டு­களை தீர்த்து நல்­லி­ணக்­க­மாக வாழ இய­லாமல் போகும்.

தனி­அ­ரசு ஒன்­றுக்­கான உண்­மை­யான கோரிக்­கைகள் அல்­லது தனி அர­சுக்­கோ­ரிக்கை முன்­நோக்­கப்­ப­டு­கி­றது என்ற எண்­ணமோ முரண் நிலையை நீடிப்­ப­தற்கே உதவும். அத்­துடன் தீவிர தேசி­ய­வாத சிங்­களக் குழுக்கள் தமிழ் மக்கள் பேர­வையின் யோச­னை­களைப் பயன்­ப­டுத்தி தமிழ் மக்கள் மீதான பார­பட்­­சத்­தையும் அர­சியல் தாக்­கு­தல்­க­ளையும் நியா­யப்­ப­டுத்தும் என்­பது நிச்­சயம். தமிழ் மக்கள் பேர­வையின் யோச­னைகள் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை தாம­திக்கும் அல்­லது பாதிக்கும் ஆற்­றலைக் கொண்­டி­ருக்­கி­றது.

தமி­ழரின் பாது­காப்பு

மூன்­றா­வ­தாக விடு­த­லைப்­பு­லிகள் அழித்­தொ­ழிக்­கப்­பட்டு, போர் முடி­வுக்குக் கொண்டுவரப்­பட்ட பின்­ன­ரும்­ கூட, முன்­னைய ராஜ­பக் ஷ அர­சாங்கம் வட­மா­காண மக்­களின் மீதான இறுக்­க­மான இரா­ணுவக் கட்­டுப்­பாட்டைத் தொடர்ந்து பேணி­யது. புதிய அர­சாங்­கம்தான் சில கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்தி பெரு­ம­ள­வுக்கு வழமை நிலை திரும்­பு­வதை அனு­ம­திக்கத் தீர்­மா­னித்­தது. இரா­ணுவ கட்­டுப்­பா­டுகள் நீக்­கப்­பட வேண்டும் என்­பதே தமிழ் மக்­களின் இடை­ய­றாத கோரிக்­கை­யாக இருந்துவரு­கின்­றது.

தமி­ழர்கள் இன்­னமும் பிரி­வினைக் கோரிக்­கை­யையே நியா­யப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்று சுட்­டிக்­காட்டக் கூடிய சான்­றுகள் தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­னாலோ அல்­லது எதிர்­கா­லத்தில் பத­விக்கு வரக்­ கூ­டிய வேறு ஒரு அர­சாங்­கத்­தி­னாலோ கண்­டிப்­பான பாது­காப்பு ஏற்­பா­டுகள் உட்­பட சில­வ­கை­யான கட்­டுப்­பா­டுகள் மீண்டும் கொண்டுவரப்­ப­டு­வதை நியா­யப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­விடும். அது மக்­களின் குறிப்­பாக வட­மா­கா­ணத்தில் வாழும் தமி­ழர்­களின் சுதந்­தி­ரத்­தையும் பாது­காப்­பையும் பாதிப்­புக்­குள்­ளாக்­கி­விடும். போரின் போது உயர்­பா­து­காப்பு வல­யத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட நிலங்­களை விடு­விப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் தாம­திக்­கவும் கூடும்.

2009 மே மாதத்­துக்கு முன்­ன­ரான உலகம்

இறு­தி­யாக, தமிழ் மக்கள் பேர­வையின் வரைவும் அதில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள யோச­னை­களும் நாட்டில் இன்று நில­வு­கின்ற அர­சியல் – இரா­ணுவ யதார்த்த நிலை­மை­களைப் பற்­றிய விளக்­கப்­பாடு அவர்­க­ளுக்கு இல்லை என்­பதை வெளிக்­காட்­டு­கி­றது. வட ­மா­கா­ணத்­துக்கு அதி­கா­ரங்­களைப் பர­வ­லாக்கம் செய்யவேண்­டு­மென்ற எந்த நெருக்­கு­தலும் தற்­போது இலங்கை அர­சாங்­கத்­துக்கு இல்லை. கூட்டு எதி­ர­ணி­யி­ட­மி­ருந்தும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஏனைய சிங்­கள தேசி­ய­வாதக் குழுக்­க­ளி­ட­மி­ருந்தும் வரக்­கூ­டிய எதிர்ப்பை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பார்க்கும் போது நியா­ய­பூர்­வ­மான அதி­காரப்பர­வ­லாக்கல் திட்­ட­மொன்றை புதிய அர­சி­ய­ல­மைப்பில் அறி­மு­கப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்­குமா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­யதே.

எனவே, தமிழ் மக்கள் பேர­வை­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள உச்ச அளவு அதி­காரப்பர­வ­லாக்க யோச­னைகள் நடை­முறைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு இல்லை. அர­சாங்கம் ‘இல்லை’ என்று மறுத்தால் என்ன செய்­வ­தற்கு தமிழ் மக்கள் பேரணி உத்­தே­சித்­தி­ருக்­கி­றது என்ற கேள்வி எழு­கி­றது. அர­சாங்கம் மீது நெருக்­கு­தலைப் பிர­யோ­கிக்கக் கூடிய போராட்­ட­மொன்றை பேரவை முன்­னெ­டுக்­குமா? கிளர்ச்­சியை தோற்­று­விக்­குமா? இந்தக் கட்­டு­ரை­யாளர் அறிந்­த­வரை, ஆர்ப்­பாட்டம் செய்த வர­லாறு எதையும் கொண்­ட­வ­ரல்ல விக்கி­னேஸ்­வரன்.

பொஸ்­னியா – ஹெர்சோகோர்­வினை நெருக்­க­டியை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக கைச்­சாத்­தி­டப்­பட்ட டேய்ரன் உடன்­ப­டிக்கை அல்­லது வட அயர்­லாந்து நெருக்­க­டிக்குத் தீர்வுகாண்­ப­தற்­காகச் செய்து கொள்­ளப்­பட்ட பெரிய வெள்ளி உடன்­ப­டிக்கை போன்­ற­தொரு உடன்­ப­டிக்­கையை இலங்கை அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்கு முன்­ன­தாக தமிழ்த் தலை­மைத்­து­வத்­துடன் (விக்கி­னேஸ்­வ­ர­னு­ட­னாக இருக்­கலாம்) செய்துகொள்ள வேண்­டு­மென்று முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் யோசனை மிகவும் கவ­னத்தைத் தூண்­டு­வ­தாக இருக்­கி­றது. டேய்ரன் உடன்­ப­டிக்­கையும் பெரி­ய­வெள்ளி உடன்­ப­டிக்­கையும் நெருக்­க­டி­களில் சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்கள் இரா­ணுவ வலி­மையைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய ஆற்­ற­லுடன் இருந்த வேளையில் வன்­மு­றையை முடி­வுக்குக் கொண்டுவரு­வ­தற்­காகக் கைச்­சாத்­தி­டப்­பட்­டவை. இலங்­கையில் விடு­தலைப்புலிகள் இப்­போது இல்லை. தமி­ழர்­க­ளிடம் இரா­ணுவ வல்­ல­மையும் இல்லை.

R-06