தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசாங்கத்துடன் இணைய முயற்சியா?
அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பு திருத்தத்தின் போது எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவதற்கு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளவர்களில் 13 பேர் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பிக்களை அரசாங்க பக்கத்திற்கு எடுப்பதில்லையென்று அரசாங்க தரப்பினர் உறுதியாக இருப்பதாகவே கூறப்படுகின்றது.
ஆனால் பழனி திகாம்பரம் , இராதாகிருஷ்ணன் , மனோ கணேசன் ஆகியோர் ஆளும் தரப்புக்கு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தகவல்களை ஆதாரம் காட்டி, சிங்கள செய்தித் தளமான நெத் செய்தி வெளியிட்டுள்ளது. -(3)




