செய்திகள்

தமிழ் மொழி காக்க பாடுபட ஒன்றினைவோம்!

தி.திருச்சோதி

நாங்கள் தமிழர்கள்! என்று சொல்கிறோம்! ஆனால் யார் நாங்கள் என்ற கேள்வியை யாராவது கேட்டு புரிந்து கொண்டீர்களா!

எத்தனையோ தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் – புத்தகங்கள் – ஆய்வு கட்டுரைகள் !
ஆனால் நாங்கள் யார் ! எங்கிருந்து நாம் வந்தோம் என்றோ – எப்படி இருந்தோம் – இன்று எப்படி இருக்கிறோம் என்ற கேள்வியை யாரும் கேட்டீர்களா?

உலகத்தில் நான் மூத்த குடி என்று வாய்கிழிய மேடைகளில் பேசுவோம்! ஆனால் அந்த மூத்த குடிக்கு தேசிய இனம் என்ற அடையாளத்தை பெற நாம் என்ன செய்தோம்!

tamilஉலகத்தின் உருவாக்கத்தில் பல காலாச்சாரங்கள் இருந்தது, அவை யாவும் அழிந்து விட்ட சூழலில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே கலாச்சாரம் – எமது கலாச்சாரம்.

நாம் ஆண்ட பரம்பரை! தமிழர்கள் அன்னியர்கள் எமது தாயகத்திட்குள் பிரவேசிப்பத்துக்கு முதல் எமது மண்ணை நாமே ஆண்டு வந்தோம்.

அன்னியர் பிரவேசத்துக்கு பின்! நாம் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இனமற்றவர்களாகி, எம்மிடம் இருந்த இறைமையை இழந்து – அன்னியர் கைப்பற்றி ஆண்டு கொண்டு இருந்த பிரதேசங்களுக்கு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு அந்த பிரதேசங்களை வளமான பூமியாக மாற்றியவர்கள் நாங்கள்!