தமிழ் வேட்பாளரை களமிறக்கும் யோசனைகளின் பின்னால் ராஜபக்ஷக்களா?
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தரப்பு வேட்பாளரை களமிறக்க வேண்டுமென்ற கோரிக்கைகளின் பின்னால் ராஜபக்ஷக்கள் இருக்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கோரிக்கைகள் ஊடாக தோல்வியுற்றுள்ள ராஜபக்ஷக்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் வேட்பாளர் என கூறுவதை அடிப்படையாகக் கொண்டு தீவிரவாத, இனவாத சிங்கள சக்திகள் ஒன்று சேர்ந்து அவர்களின் கரங்களை பலப்படுத்தும் சம்பவம் நிகழலாம். முன்னர் இவ்வாறான யுக்திகளை கையாண்டு தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். அப்படி போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் பாராளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்திலும் போட்டியிட்டார் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
-(3)




