செய்திகள்

தம்பியை கொலை செய்த அண்ணன் : வெள்ளம்பிட்டியில் சம்பவம்

அண்ணனால் தாக்கப்பட்டு தம்பி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அண்ணன் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக இருவருக்கிடைய நிலவிய முறுகல் நிலையை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  -(3)