செய்திகள்

தம்புளை ஹபரணை வீதியில் பஸ்ஸில் யானை மோதி விபத்து : 9 பயணிகளுக்கு காயம்

தம்புளை ஹபரண பிரதான வீதியில் மீகஸ்வெவ பகுதியில் இன்று அதிகாலை யானையொன்று பஸ்ஸொன்றில் மோதியதால் பஸ்ஸிலிருந்த பயணிகள் 9 பேர் கயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து தெஹியத்தகண்டிய நோக்கி சென்ற பஸ்ஸிலேயே அந்த யானை மோதியுள்ளது.

பஸ்ஸில் மோதிய யானை குழப்பமடைந்து பஸ்ஸின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பின்னர் பயணிகள் சத்தமிட்டதையடுத்து அது காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 9 பயணிகள் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யானைக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவம் காயத்துடனேயே அது காட்டுக்குள் ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் அதனை கண்டுபிடிப்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.