செய்திகள்

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் தற்காலிக நீக்கம்

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ”வார இதழ் ஒன்றுக்கு விஷால் அளித்த பேட்டி தயாரிப்பாளர் சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது.

மேலும், இதுபோல் தொடர்ந்து விஷால் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்துகொண்டதைக் குறிப்பிட்டு, அவருக்கு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அன்று தயாரிப்பாளர் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்ப்பட்டது.

அதற்கு விஷால் அளித்த பதில் திருப்தியாக இல்லை. கடந்த 12-ம் தேதி அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில், செயற்குழு எடுத்த தீர்மானத்தின்படி, சங்க விதி எண் 14-Dயில் உள்ளபடி, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் விஷால் தயாரிப்பாளர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

n10