தற்போதைக்கு சிவகார்த்திகேயனின் ஒரே டார்க்கெட் இது தான்
சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் விரைவில் இவர் நடிக்கும் ரெமோ படம் திரைக்கு வரவிருக்கின்றது.இன்னும் சில தினங்களில் இப்படத்தின் சென்ஸார் சென்னையில் நடைப்பெறவுள்ளது, எப்படியும் இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் மட்டுமின்றி படக்குழுவே காத்திருக்கின்றது.
ஏனெனில் சிவகார்த்திகேயனுக்கு 6 லிருந்து 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் இவர் படத்தை பார்க்க வருவார்கள்.மேலும், இப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அதுமட்டுமின்றி அதிக விலைக்கும் விற்ற படம்.இதனால், எப்படியும் யு சான்றிதழ் வாங்கி வரிவிலக்கு பெற வேண்டும் என்பதே படக்குழுவினர்களின் ஆவல். பொறுத்திருந்து பார்ப்போம்.
N5




