செய்திகள்
தலதா மாளிகையின் தியவடன நிலமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்
கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலந்த தெல பண்டார பொலிஸ் நிதி மோசடி பிரிவினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தலதா மாளிகையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இவருக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தலதா மாளிகைக்கு கிடைத்த நிதியை முறையற்றவகையில் பயன்படுத்தியதாக தெரிவித்து இவருக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் அண்மையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




