தலவாக்கலை வனப்பகுதியில் தீ – 3 ஏக்கர் நாசம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தலவாக்கலை நகர சபை ஆகியவற்றிக்கு அண்டிய வளாகப்பகுதியில் காணப்பட்ட மூன்று ஏக்கர் கொண்ட வனப்பகுதி திடீர் தீ விபத்துக்குள்ளாகி சாம்பலாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. இதில் பாடசாலை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஆசிரியர்கள் மாணவர்களை பாடசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதனையடுத்து இந்த தீ விபத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர தலவாக்கலை லிந்துலை நகர சபை தலவாக்கலை பொலிஸாரின் உதவியை கொண்டு செயல்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.
n10






