செய்திகள்
தவறான தகவலை பரப்பியதற்காக நடிகர் சூர்யாவிடம், ‘பீட்டா’ மன்னிப்பு கேட்டது
தவறான தகவலை பரப்பியதற்காக நடிகர் சூர்யாவிடம், ‘பீட்டா’ அமைப்பு மன்னிப்பு கேட்டு உள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் நடந்த போராட்டம் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட திரையுலக பிரமுகர்கள் பலர் குரல் கொடுத்தனர்.
இந்தநிலையில் தான் நடித்து வரும் ‘சி3’ படத்தை பிரபலப்படுத்துவதற்காகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா போராடுகிறார் என்ற செய்தியை ‘பீட்டா’ அமைப்பு வெளியிட்டிருந்தது. இந்த செய்தி நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளித்தது.
இதையடுத்து தவறான செய்தி பரப்பியதற்கு மன்னிப்பு கோரும்படி நடிகர் சூர்யா சார்பில் அவரது வக்கீல் ஆர்.விஜய் ஆனந்த் என்பவர் மூலம் ‘பீட்டா’ அமைப்புக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதற்கு பீட்டா அமைப்பு மன்னிப்பு கேட்டிருக்கிறது.
‘நடிகர் சூர்யாவை பற்றி தவறான ஒரு செய்தியை பரப்பியதற்காக முழுமனதோடு மன்னிப்பு கேட்கிறேன்’, என்று ‘பீட்டா’ அமைப்பின் நிர்வாக தலைவர் பூர்வா ஜோஷி பூரா, நடிகர் சூர்யாவுக்கு பதில் அனுப்பியுள்ளார்.
N5




