செய்திகள்

தவறு செய்தால் மன்னிப்பது மனிதன்மை – சனத் ஜயசூரிய

தவறு செய்தால் மன்னிப்பது மனிதன்மை என்றும் போராட்டகாரர்கள் அதிகளவில் கைது செய்யப்படுவது மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிலரை தடுத்து வைத்துள்ளமை என்பன மிகவும் கவலைக்குரிய விடயங்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது மெதுவாக வழமையான நிலைமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது எனவும் பின்நோக்கி செல்லாமல் முன்நோக்கி செல்ல வேண்டிய காலம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.(15)