செய்திகள்

தாஜுதின் கொலையுடன் இளம் அரசியல்வாதிக்கே தொடர்பு : விளையாட்டு சங்கம் தொடர்பான முறுகலே கொலைக்கு காரணமாம்

பிரபல ரகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜூதினின் கொலைக்கு ஹெவ்லொக்ஸ் ரகர் விளையாட்டு சங்கத்தை கொள்வனவு செய்யவது தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் இளம் அரசியல்வாதியொருவருடன் ஏற்பட்ட முறுகலே காரணமேன விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த சங்கத்தை அந்த இளம் அரசியல்வாதி தன்வசப்படுத்திக்கொள்ள முயற்சித்த போது அதற்கு தாஜுதின் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடிப்படையாக கொண்டு இரண்டு தரப்பினருக்குமிடையே கடும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாகவும் அதனை தொடர்ந்தே தாஜுதின் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை திசை திருப்பும் நோக்கிலேயே அவரின் கொலையுடன் காதல் விவகாரத்தை தொடர்புபடுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குறித்த இளம் அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 n10