செய்திகள்

தாஜுதின் கொலை தொடர்பாக விரைவில் நாமல் கைதாவார்?

வசீம் தாஜுதினின் கொலைச் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 8 பேர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.
பிரபல  ரகர் விளையாட்டு சங்கமொன்றை தம்வசப்படுத்திக்கொள்வதற்கு நாமல் தரப்பினர் முயற்சித்து வந்த போது அதற்கு தாஜுதின் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலேயே குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012  மார்ச் 17ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டிய பகுதியில் காரொன்றினுள் எரிந்த நிலையில் தாஜுதின் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின்  மூலம் இது விபத்து என கூறப்பட்ட போதும்  கடந்த வருடம் முதல் மீண்டும் அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த  நிலையில் இது கொலையே எனவும் இதற்கான சாட்சிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை  கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இது  தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த மரணத்தை சாட்சிகளின் மூலம் கொலையாக சந்தேககிக்க முடியுமெனவும் இதன்படி இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஒரு மாத காலப்பகுதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் நீதவான் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
n10