செய்திகள்

தாஜுதின் கொலை தொடர்பான சீ.சீ.டி.வீ வீடியோவை கனடாவினாலும் அடையாளம் காண முடியவில்லை

ரகர் வீரர் வசீம் தாஜுதினின் கொலையுடன் தொடர்புடைய சீ.சீ.ரீ.வி வீடியோ காட்சியில் இருப்பவர்களை கனடாவினாலும் கண்டுபிடிக்க முடியாது போயுள்ளது.
குறித்த வீடியோ தரம் மற்றும் தெளிவானதாக இல்லையெனவும் இதனால் அதில் காணப்படுவர்களை கண்டுபிடிக்க முடியாதுதுள்ளதாகவும் கனடாவின் பிரிடிஸ் கொலம்பிய ஆய்வு நிறுவனம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீடியோவை முதலில் இலங்கையில் ஆய்வுக்கு உட்படுத்திய போதும் அதனை அடையாளம் காணமுடியாதிருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுடன் அது கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. -(3)