தாஜுதின் கொலை வீடியோ 22ஆம் திகதி கனடாவுக்கு கொண்டு செல்லப்படும்
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதினின் கொலை தொடர்பான சீ.சீ.ரீ.வீ வீடியோ காட்சிகள் அடங்கிய 10 இருவட்டுகளை ஆய்வுக்காக கனடாவுக்கு அனுப்ப கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இரகசிய பொலிஸாருக்கு இன்று அனுமதியளித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த இருவட்டுக்களுடன் இரகசிய பொலிஸ் குழுவொன்று கனடாவுக்கு செல்லவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பான சீ.சீ.ரீ.வீ விடியோ காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ள போதும் காட்சியில் காணப்படும் சந்தேக நபர்களை இனங்காண முடியாத காரணத்தினாலேயே அதனை கனடாவுக்கு அனுப்பி அங்கு ஆய்வுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)




