செய்திகள்
தாஜூதினின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதினின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தாஜூதினின் மரணத்தை கொலையாக சந்தேகிப்பதற்கான சாட்சிகள் இருப்பதாகவும் இதன்படி அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கையெடுக்குமாறு நீதவான் குற்ற விசாரணை பிரிவினருக்கு இன்று அறிவித்தல் விடுத்துள்ளார்.
2012ஆம் ஆண்டில் நாரஹேன்பிட்டிய பகுதியில் காரொன்றில் எரிந்த நிலையில் தாஜுதினின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அது விபத்தாக் அப்போது கூறப்பட்ட போதும் கடந்த வருடம் முதல் அது தொடர்பாக நடத்தபட்ட விசாரணைகளின் மூலம் அது கொலையென சந்தேகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
n10




