செய்திகள்

தாஜூதீன் கொலை வழக்கில் புதிய திருப்பம்: பொலிஸ் பொறுப்பதிகாரி இரகசிய வாக்மூலம்

வசீம்தா ஜுதீனின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  நாரஹேன்பிட்டி காவற்துறை குற்றவியல் பிரிவின் முன்னாள் நிலையப்பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க, இன்று இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கினார்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி நிராந்த பீரிஸ் முன்னிலையில் அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். தாம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கவிருப்பதாக நேற்றையதினம் அவர் தெரிவித்திருந்தார்.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான ஆவணங்களை மறைத்தமைக்காக, மேல்மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமித் சம்பிக்கவின் இன்றைய வாக்குமூலம் தாஜூதீன் கொலை விசாரணையில் புதிய திருப்பம் ஒன்றை ஏற்படுத்தலாம் எனக் கருதாப்படுகின்றது.
R-06