தாடி வளர்த்தல், புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி அறிவித்தலை வெளியிட்டுள்ளது
n10




