செய்திகள்

தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்குமாறு குரல் கொடுப்பது அபத்தமானது : சுரேஷ்

தாண்டிக்குளத்தில் தமிழ் மக்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய விவ­சாய பாட­சா­லையின் ஐந்து ஏக்கர் காணியை பறித்­தெ­டுத்து அதில் பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை கட்­ட­வேண்டும் என குரல் கொடுப்­பது அபத்­த­மா­னது. எனவே துறை­சார்ந்த வல்­லு­நர்கள், நிபு­ணர்கள் கூறு­கின்ற ஓமந்தை அல்­லது மாங்­குளம் போன்ற பகு­தி­களில் வடக்கு மாகா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமை­வதே பொருத்­த­மா­னது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்­சந்­திரன் தெரி­வித்தார்

வடக்கு மாகா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமைவது குறித்த சர்ச்சை தொடர்­பாக கேட்­கப்­பட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பொரு­ளா­தார மத்­திய நிலை­ய­மா­னது வவு­னியா மாவட்­டத்­திற்கு மாத்­திரம் என்று வவு­னியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களோ சிந்­திக்கக் கூடாது. மாறாக பொரு­ளா­தார மத்­திய நிலை­ய­மா­னது வட­மா­கா­ணத்­துக்­கா­ன­தாகும். இந்த மத்­திய நிலையம் ஊடாக வடக்கில் உற்­பத்­தி­செய்­யப்­ப­டு­கின்ற உணவு வகைகள், தானி­யங்கள் போன்­ற­வற்ரை கொள்­வ­னவு செய்­வ­தற்கும் விற்­பனை செய்யவும் முடியும்.

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார் உட்பட வவு­னி­யாவில் இருந்து கொண்டு வரக்­கூ­டிய பொருட்கள் அனைத்­தையும் ஒரு இடத்­திற்கு கொண்­டு­வ­ரு­வ­த­னூடாக அதனை தென்­ப­கு­திக்கும் ஏனைய பகு­திகளுக்கும் ஏற்­று­மதி செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும். காலப்போக்கில் இந்த சந்தை விஸ்­த­ரிக்­கப்­பட்டு அது ஒரு நக­ர­ம­யப்­ப­டுத்­தி­ய­தாக இருக்கும்.

தற்போதுள்ள தம்­புள்ளை சந்­தை­யா­னது, மகா­வலி வல­யத்தில் இருக்­கக்­கூ­டிய சகல பொருள்­க­ளையும் அங்கு கொண்­டு­வந்து கொள்­வ­னவு மற்றும் விற்­பனை செய்­வ­த­னூ­டாக அப்பகுதி மிகப் பெரிய நக­ர­மாக மாறி­யுள்­ளது. அவ்­வா­றான சூழ்­நி­லையில் தாண்டிக்குளத்தில் தமிழ் மக்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய விவ­சாய பாட­சா­லையின் ஐந்து ஏக்கர் காணியை பறித்­தெ­டுத்து அதில் பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை கட்­ட­வேண்டும் என குரல் கொடுப்­பது அபத்­த­மா­னது.

அது­மட்­டு­மன்றி தமிழ் மக்­களின் எதிர்­கா­லத்தை சிறி­த­ள­வேனும் சிந்­திக்­காமல் செயற்­ப­டு­கின்ற செய­லைத்தான் இன்று பார்க்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இவர்கள் அந்த பணத்தை வவு­னி­யாவில் பயன்­ப­டுத்­தா­விட்டால் பணத்தை மீள் எடுத்து விடு­வார்கள் என்றால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்று சேர்ந்து எங்­க­ளுக்கு ஓமந்­தையோ அல்­லது மாங்­கு­ள­மோதான் வச­தி­யாக இருக்­கி­றது என ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கும் கூற­வேண்டும்.

குறித்த பகு­தியில் எமக்கு வச­திகள் இருக்­கின்­றன. குறிப்­பாக நீர் நிலைகள் இருக்­கின்­றன, இட­வ­ச­திகள் தேவை­யான நேரத்­திலும் விஸ்தரிப்­ப­தற்கும் வச­திகள் இருக்­கின்­றன, மக்கள் வந்து போவ­தற்கும் இது மையப்­புள்­ளி­யாக இருக்கின்றது.

என்ன இலாபத்திற்கோ தெரியவில்லை. எமது உறுப்­பி­னர்­கள் தாண்­டிக்­குளம் என்றும் ஓமந்­தை­யென்றும் தங்­க­ளுக்குள் பிரிந்துகொண்டு செயல்­ப­டு­வது எதிர்­கால சிந்­தனை இல்­லாத செயற்­பாடா­கவே பார்க்க வேண்டியுள்ளது. இதே­வேளை இந்த பிரச்­சி­னையை தீர்­ப்பதற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தலைவர் சம்­பந்தன், பார­ாளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண அமைச்­சர்­களை அழைத்து எல்­லோ­ரு­டைய விருப்­பங்­களை அறிந்து முடிவு காண்போம் எனக் கூறி­யுள்ளார். இது­மேலும் சிக்­கல்­களை உரு­வாக்­கு­வ­தா­கவே உள்­ளது.

பொரு­ளா­தார மத்­திய நிலையம் எங்கு வர­வேண்டும் என்­பது சாதா­ரண பொது மக்­களே கூறும் நிலையில் இது தொடர்­பாக துறை­சார்ந்த வல்­லு­நர்கள், நிபு­ணர்கள் கூறு­கின்ற ஓமந்­தைக்கோ மாங்­கு­ளத்­திற்கோ நகர்­த்து­வ­துதான் சரி­யா­னது. இதில் நாம் தலை­யிட்டு குழப்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்­தி­ருக்க வேண்டும். அதனை விடுத்து மேலும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் சிறு­பான்மை பெரும்­பான்மை என்­று­ பார்ப்­பது பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான விட­ய­மல்ல.

தங்­க­ளு­டைய சுய­ந­ல­கா­ர­ணங்­களை முன்­வைத்து தாண்­டிக்­கு­ளத்­திற்கு கொண்­டு­வரச்சொல்­வது தமிழ் மக்களுடைய தேவையின் அடிப்படையில் அல்ல. ஓருசில பாராளுமன்ற, மாகா-ணசபை உறுப்பினர்களுடைய சுயநல சிந்த-னை-யுடைய வெளிப்பாடாகவே இரு-க்கி-றது.

ஆகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்புத் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான சம்-பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்கினே-ஸ்வ-ரனுடன் இணைந்து ஓமந்தை-யிலோ அல்லது மாங்குளத்திலோ அமைப்ப-தற்-கான முடிவை எடுப்பதே சிறந்த முடி-வாகும். இதுவே தமிழ் மக்களு-டைய எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றார்.
R-06