செய்திகள்
நான் அரசியலுக்கு வரமாட்டேன்: கோதாபய தெரிவிப்பு
தான் ஒரு போதும் அரசியலுக்கு வரப்போவதில்லையென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக தனக்கு புலனாய்வு பிரிவின் யாரும் தகவல் தருவதுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பாதுக்க பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றுக்கு சென்றிருந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் பாதுகாப்பு செயலாளராக இருக்கும் போது நாட்டில் சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்திய பின்னரே விலகியுள்ளேன். யுத்தத்தை முடித்ததுடன் கடந்த 5 வருடங்களுக்கு சிறந்த பாதுகாப்வை நாட்டுக்கு ஏற்படுத்தியிருந்தேன். இந்த நிலமை இன்னும் தொடரவேண்டும். ஆனால் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இப்போ எனக்கு எதுவும் கூற முடியாது. புலனாய்வு பிரிவினர் எனக்கு தகவல் தருவதில்லை. இதேவேளை நான் அரசியலுக்கு வர மாட்டேன். என அவர் அங்கு தெரிவித்துள்ளார்.




