செய்திகள்

தாமரை கோபுரத்தால் 3 நாட்களில் 7.5 மில்லியன் வருமானம்!

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் மூலம் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தாமரைக் கோபுரம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இதன்படி மூன்று நாட்களுக்குள் சுமார் 14, ஆயிரம் பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.

இதன்மூலம் 7.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

-(3)