தாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
தாயகத்தில் உறவுகளினால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை வலுப்படுத்தி அவர்களது கரங்களை வலுப்படுத்தும் முகமாக பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (12.02) இடம்பெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக் கிழமை மதியம் 01:00 மணி தொடக்கம் 04:00 மணி வரை No10, DOWNING STREET, WESTMINSTER, LONDON, SW1A 2AA என்னும் இடத்தில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கோப்பாபுலவு மக்கள் வெயில் மழை பாராது வீதியோரம் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஐ.நாவே சர்வதேச விசாரணையை வலியுறுத்து, தமிழ் மக்களின் காணிகளில் இருந்து இரபணுவமே வெளியேறு, கேப்பாபுலவு மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளி, உள்ளிட்ட பல்வேறு சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

N5




