செய்திகள்

தாய், குழந்தையின் சடலங்கள் மீட்பு: மிருசுவிலில் சம்பவம்!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில்  வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயினதும் அவரின்  குழந்தையினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மிருசுவில் தெற்கை சேர்ந்த  4 பெண்ணும் அவரின் 7 மாத குழந்தையின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதேவேளை சவாகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் அ. ஜுட்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து , சடலத்தை மீட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

-(3)