செய்திகள்

தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது.

ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் நீதிமன்ற விசேட வைத்தியர்கள் குழுவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவரது உடல் இன்று முற்பகல் கொழும்பு பொரளை மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

-(3)