திருகோணமலையில் விமான விபத்து : இருவர் உயிரிழப்பு
விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை விமானப் படைத் தளத்தின் சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு விமானப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சீன குடா தளத்தில் அமைந்துள்ள பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT 6 ரக விமானமே இன்று (ஆகஸ்ட் 7, 2023) காலை 11:27 மணியளவில் இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
-(3)




