செய்திகள்

திருமலையை தனிச்சிங்கள மாவட்டமாக்கும் இலக்குடனேயே அரசு செயற்படுகின்றது: சுரேஷ்

திரு­கோ­ண­ம­லையை தனிச்­சிங்­கள மாவட்­ட­மாக மாற்ற 30 ஆண்டு திட்டம் ஒன்­றினை 2011 ஆம் ஆண்டில் அரசு திட்­ட­மிட்டு அதற்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­தையும் பெற்று செயற்­பட்டு வரு­கின்­றது. இத்­திட்­டத்­திற்கு வட­மத்­திய மாகாண அபி­வி­ருத்தி திட்டம் என்ற பெயரில் பொல­ன்னறுவை, அனு­ரா­த­புரம், திரு­கோ­ண­மலை, மாத்­தளை உட்­பட பல மாவட்­டங்கள் உள் வாங்­கப்­பட்­டுள்­ளன என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

தமிழ் மக்கள் பேர­வையின் தமிழ்த் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வுத் திட்ட முன் வரைவு கருத்­த­றி­வ­தற்­கான ஆலோசனைக் கூட்டம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 10.30 மணி­ய­ளவில் திரு­கோ­ண­மலை தபால் நிலைய வீதியில் உள்ள குளக்­கோட்டன் ஒன்றுகூடல் மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

இந்­நி­கழ்­வுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், தீர்­வுத்­திட்ட நிபு­ணர்­கு­ழுவின் அங்­கத்­தவர் சட்­டத்­த­ரணி காண்­டீபன், பரந்­தாமன், திரு­கோ­ண­ம­லை மறை­மா­வட்ட ஆயர் நோயல் இமா­னு­வேல், மலை­மு­ரசு பத்­தி­ரிகை ஆசி­ரியர் ஞானேஸ்­வரன், எழுத்­தாளர் யதீந்­திரா, சட்­டத்­த­ரணி ஜெக­ஜோதி உட்பட பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதன்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறுகையில், “எதிர்­வரும் 2030 ஆம் ஆண்டில் திரு­கோ­ண­ம­லையின் சனத்­தொகை 10 இலட்சம் என்ற நோக்கில் முன்­னெ­டுக்­கப்­படும் இத்­திட்­டத்தின் மூலம் அமைக்­கப்­படும் புதிய தொழிற்­சா­லைகள் தொழி­ல்நுட்ப நிலை­யங்கள் முத­லி­ய­ன­வற்­றிற்கு தெற்கில் இருந்து சிங்கள் மக்­களை குடி­யேற்றி திரு­கோ­ண­ம­லையின் துறை­மு­கத்தை மைய­மாக வைத்து பல அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளையும் தொழிற்­சா­லை­க­ளையும் அமைத்து தமி­ழர்­களை அரி­தாக்கும் திட்டம் அது.

அவ்­வா­றான திட்­டங்­களை தடுக்கக் கூடிய தீர்­வு­களை நாம் முன் வைக்­க­வேண்டும். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைமை பாத்­தி­ரத்தை வகிக்கும் இரா.சம்­பந்­தனை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அனுப்­பிய இந்த மாவட்­டத்தின் இவ்­வா­றான நிலையை நாம் சிந்­தித்து செயற்­பட வேண்­டி­யுள்­ளது” என தெரி­வித்தார்.

R-06