செய்திகள்

திருகோணமலை சென்ற ஞானசார தேரர்!

பௌத்த சமூகத்திற்கும் விகாரை நடவடிக்கைகளுக்கும் அவமரியாதை செய்யும் வகையில் பொலிஸார் நடந்துகொண்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றவோ மேலும் கட்டுமான வேலைகளை செய்யவோ வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள ஞானசார தேரர் ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, பௌத்த சமூகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையே பொலிஸாரும் பின்பற்றுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பௌத்த சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க பௌத்த மக்கள் ஒற்றுமையாக எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.