செய்திகள்

திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ்.சொமசெற் கடற்படைக் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
நல்லெண்ண நோக்கோத்தோடு வருகை தந்துள்ள இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்றுள்ளனர்.
எதிர்வரும் 26ஆம் திகதிவரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ள இந்த கப்பல் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பயிற்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)