செய்திகள்

திருட்டுப்பயலே-2′ இல் வில்லனாக களமிறங்கும் பிரசன்னா

2006இல் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘திருட்டுப்பயலே’. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து, சுசி கணேசன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த பாகம் ‘ திருட்டுப்பயலே-2′ என்ற பெயரில் தற்போது தயாராகி வருகின்றது. இதில் பாபிசிம்ஹா கதாநாயகனாக நடிக்கவுள்ளதோடு, அவருக்கு வில்லானாக பிரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த படம் தொடர்பில் கருத்து தெரிவித்த படத்தின் இயக்குனர் சுசிகணேசன் கூறுகையில்

‘பத்து வருடத்துக்கு முன்னால் இருந்த திருட்டுப்பயல்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் கூடுகிறதே தவிர குறைய வில்லை. சிறுசிறு குற்றங்கள் தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையை விட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாகத்தின் பெரும் பகுதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளதோடு, 2ஆம் பாகத்தை பிரமிக்க வைக்க ஒரு அழகான தீவு தேடும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ‘ திருட்டுப்பயலே-2′ படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு, வெளிநாட்டில் நடைபெறுகிறவுள்ளதோடு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

N5