செய்திகள்

திருட்டு விசிடி தமிழ் ராக்கர்ஸ் மனதை மாற்றிய ராகவா லாரன்ஸ்

தற்போது சென்னையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பெருமளவு உதவி செய்துவருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்த போராட்டத்தில் நான் ஒரு நடிகனாக இல்லாமல் தமிழனாக கலந்து இருக்கிறேன் என்று கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் போராட்டத்துக்கு பக்கபலமாக இருக்கிறார்.

இந்நிலையில் தமிழ் படங்களை முதல் நாளே சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இன்று முகப்புத்தகத்தில் ராகவா லாரன்ஸ் பற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

தமிழனுக்காக போராடும் ராகவா லாரன்ஸை உங்கள் மதிக்கிறோம், ஆகையால் அவரது சிவலிங்கா படத்தை முதல் நாளே வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை கபாலி, பைரவா போன்ற பெரிய படங்களையே அவ்வளவு சட்ட நடவடிக்கையும் மீறி வெளியிட்ட இணையதளத்தின் இந்த முடிவை இணையவாசிகள் வரவேற்றுள்ளனர்.

N5