திருமணத்தை தள்ளிப்போடும் ஹீரோயின்கள்
ஒன்றிரண்டு நடிகைகள் மட்டுமே முன்னணி இடத்திலிருந்தபோதும் திருமண வயது வந்தவுடன் குடும்பத்தினரின் வற்புறுத்தல், காதல் விவகாரங்களால் திருமணம் செய்துகொள்கின்றனர். அவசரத்தில் திருமணம் செய்துகொள்ளும் சில நடிகைகள் பின்னர் விவாகரத்து பெற்று மீண்டும் நடிக்க வருகின்றனர். நடிகைகள் பிரியாமணி, நமீதா தங்களது மார்க்கெட் மீண்டும் உயரும் என்று பல வருடங்கள் காத்திருந்தனர். எதிர்பார்த்தது நடக்காத நிலையில் அவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். திரிஷா திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடிப்பில் ஆர்வம்காட்டி வருகிறார்.
அனுஷ்கா, காஜல் அகர்வால், நயன்தாரா போன்றவர்களின் திருமண பேச்சும் அவ்வப்போது அடிபடுகிறது. ஆனால் அவர்கள் யாரும் திருமணத்துக்கு தயாராக இல்லை. இவர்களில் நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவனுடன் லிவிங் டுகெதர் பாணியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஸ்ருதிஹாசன் லண்டன் பாய்பிரண்டுடன் லிவிங் டுகெதர் பாணியில் வசிக்கிறாராம். இவர்களைப்போலவே நடிகை அஞ்சலியும், ஜெய்யும் காதலிப்பதாகவும், லிவிங் டு கெதர் பாணியில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவருக்கும் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டிருக்கும் நிலையில் திருமணம் அதற்கு தடையாக வந்துவிடுமோ என்ற தயக்கத்தில் இருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் ஜெய், அஞ்சலி நடித்த பலூன் பட நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் அஞ்சலி. அவரிடம் திருமணம் எப்போது என்றபோது, ‘தற்போது உடல் எடையை குறைத்து வருகிறேன். நான் எங்கு போனாலும் எனக்கு திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். அடுத்த வருடம் நடிப்பதற்கும் நிறைய கால்ஷீட்கொடுத்திருக்கிறேன். இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. தேசிய விருது வாங்க வேண்டும் என்ற லட்சியம்தான் இருக்கிறது. எனவே நடிப்பில்தான் என் கவனம் முழுவதும் இருக்கிறது’ என்றார்.(15)




