செய்திகள்

திரைப்பட நடிகையாகிறார் டயானா கமகே

கடந்த நாட்களில் பாராளுமன்றத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்திய திரைப்படம் ஒன்றில் பெண்பிக்குவாக நடிக்க தெரிவாகியுள்ளதாக தேசிய நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று மொட்டையடித்துக்கொண்டதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உள்ள மூத்த திரைப்பட இயக்குனர் ஒருவரால் பொருத்தமான பாத்திரத்திற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், இது இலங்கை இந்திய நட்புறவுக்காக உருவாக்கப்பட்ட பௌத்த கருப்பொருளைக் கொண்ட உன்னதமான திரைப்படம் என்றும் அந்தச் செய்தி மேலும் கூறுகிறது.

இதற்கிடையில், அவர் நடித்திருக்கும் மெஹனினுவின் பாத்திரம் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று, என்றும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டயானா கமகே இந்திய திரைப்பட இயக்குனரின் அழைப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டதாகவும் மேலும் கூறுகிறது.

-(3)