செய்திகள்

திலினி பிரியமாலி செய்த நிதி மோசடியின் மொத்த பெறுமதி 128 கோடியாக அதிகரிப்பு!

சட்டவிரோத நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற குற்றச்சாட்டில் கைதான திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகளின் மொத்த பெறுமதி தொடர்பில் தககவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அவர் செய்துள்ள நிதி மோசடியின் மொத்த பெறுமதி 128 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவர் செய்ததாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

-(3)