திவிநெகும வழக்கிலிருந்து பஸில் விடுதலை
திவிநெகும திணைக்களத்தில் நிதியை பஞ்சாங்க கலண்டர்களை அச்சிடுவதற்காக முறையற்றவகையில் பயன்படுத்திய குற்றசாட்டு தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 29 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி 50இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டதாக தெரிவித்து முன்னாள் பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து குறித்த வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றபத்திரிகையில் தவறுகள் காணப்படுவதால் அதனை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வழக்கில் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடை மற்றும் பிணை நிபந்தனைகளும் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. -(3)




