செய்திகள்

திஸ்ஸமஹாராம வாகன விபத்தில் மூவர் பலி

கொழும்பு கதிர்காமம் பிரதான வீதியில் திஸ்ஸமஹராம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

Image00001accident-1
இன்று பிற்பகல் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.          -(3)