செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலி ஆவணங்களை ஊடகங்களுக்கு விநியோகித்தமை தொடர்பாக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வகையில் அவருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையே ஒப்பந்தம் இருப்பதாக தெரிவித்து போலி ஆவணங்களை அவர் ஊடகங்களுக்கு விநியோகித்திருந்தாக தெரிவித்தே அவருக்கு எதிராக நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. -(3)