செய்திகள்

திடீரென இலங்கை வந்து போன தென் ஆபிரிக்க ஜனாதிபதி

தென்ஆபிரிக்கா ஜனாதிபதி ஜாகொபி சூமா இன்று திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
சீனா நோக்கி அவர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்பும் நோக்கில் இன்று அதிகாலை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது விமான நிலையத்திலுள்ள வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவரை விமான நிலையத்திலுள்ள விசேட அதிதிகள் பிரிவுக்கு கூட்டிச் சென்றுள்ளதுடன். அதனை தொடர்ந்து சில மணித்தியாலங்களில் அவர் சீனா நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)